ஆரம
ஆரம்மார் புஒளிதயங்கஅரி யாசனம்இழிந்து,
அடியிடுந் தொறும்அனந்தபண
பந்திஅதிரப்,
பாரவாள்உறை கழித்துமுது பாதகன்வரப்
பரமஞா னிதனி நின்றுநகைசெய்
தருளவே,
(406)
அநந்த பணபந்தி: திருவநந்தாழ்வானின் படங்களின் வரிசை
பரமஞானி: பிரகலாதன்
தீதுகண்ட நெறியாளன் அதுகண்டு மறுகிச்,
“சிறுவன்நீஎதிர்
செருக்கொடு சிரித்தனையதிங்கு
ஏதுகண்டனை?” எனக் குரிசில்
“என்னுயிர் நினக்கு
எளியதோ”என
விளம்பி, “இறையோனது”எனவே,
(407)
இரணியன் வதைப்படலம் 126
“இறைவன் என்றுஎதிர் விளம்பிய துஏவனை?
அடா!
ஏவல்செய் தொழுகும் மூவர்களையோ?
அவர்களைத்
திறையுடன் பணியும் இந்திரனையோ?
அவனையே
தெய்வம்என் பவரையோ?
தெளியஓது” கெனவே
(408)
“உம்பராய், முனிவராய்,
அனைவருக்கு ஒருவராய்,
உலகெலாம்உடையராய்,
இடையில் வாழ்பவரெலாம்
எம்பிரானைஅறியார்;
சிறிதுகாலம் நடுவே,
ஈசனார் இறைவனார்என
இருப்பர்” எனவே,
(409)
“மூவர்என்று, அமரர்என்று,
அவுணர்என்று, முடியா
முதல்வர் என்றுஎதிர்
மொழிந்தன கிடக்க; முதலோர்
யாவரும்தெளி விலாதவகை நின்று,ஒருவனே
இறைவன் ஆகில், அவன்
எங்குளன்? இயம்பு”கெனவே
(410)
“தேறு கின்றிலைஇது ஒன்றுஉனது
சிந்தையில்உளன்;
தெளிவிலாதன சராசரம்
அனைத்திலும்உளன்;
கூறு கின்றபர மாணுவொடு
குன்றிலும்உளன்;
குவலயங்கள்பதி னாலும்முதல்
கோலியுளனே.
(411)
இரணியன் வதைப்படலம் 124
|