பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

64

New Page 1

        “ஒன்றில் ஒன்றியுளன்; ஒண்சுடர் இரண்டில் உளன்மூ
            வுருவு பேணியுளன்; ஓதுமறை நாலினும்உளன்;
        வென்று இலங்குகனல் ஐந்துபெரு வேள்வியில்உளன்;
            வேறுவே றுசம யங்கள்அவை ஆறில்உளனே.          

(412)

    ‘சுடர் இரண்டு’: சந்திர சூரியர்
    ‘மூஉருவு’: ‘ஓர் உருவம் பொன் உருவம், ஒன்று செந்தீ, ஒன்று மா கடல்
    உருவம்’ ( திருநெடுந்தாண்டகம் )
    இரணியன் வதைப் படலம் 122

        “பூவில் வாசம்எனவும், பொழிலில் நீழல்எனவும்,
            புலப்படாவகை புறத்தினும் அகத்தினும்உளன்;
        யாவர் பாலும்ஒரு காலும்ஒழியாமல்உளன்; ஆ
            யிடைவிடான்இறை வன்எங்கும்உளன்” என்றபொழுதே.   

(413)

    இரணியன் வதைப் படலம் 120

        “ஈசன் என்றுஒருவன் எங்கும்உளன் என்றனையடா!
            யான்இயம்பிய இடத்தும்உளன்ஆகில், எதிரே
        நீசன் நின்றமைநிரப்பு. அது நிரப்புகிலையேல்,
            நின்உடல்குரு திஎன்உடல் நிறைப்பன்” எனவே,    

(414)

    இரணியன் வதைப் படலம் 125

        “தன்னை யாரும்அறி யாதவகை நின்றதலைவன்,
            தான்எனக்கு வெளிநிற் கைதவறில் சரதம்நான்
        என்றன்ஆ ருயிர்முடிப்பன் முடியா தொழிவனேல்,
            யான்அவற்கு அடிமை அல்லன்இது காண்டி!” எனவே,   

(415)

    இரணியன் வதைப்படலம் 126

        “நன்று, நன்று, மக னார்சபதம்நன்று” எனநகா,
            நடுவுநின்றதொரு தூண்அருகுசென்று ஒருகையால்
        “என்றும் எங்கும்உளன் என்றஇறை இங்கும்உளனோ?”
            எனஉரைத்து உரும்இடித்தென அடித்தபொழுதே,    

(416)

    இரணியன் வதைப்படலம் 127

        “இடிவிழுந்தது விழுந்த” தென; இம்பர், “எழுபார்
            இடைகிழிந்தது கிழிந்த” தென; உம்பர், “அகல்வான்
        முடிபிளந்தது பிளந்த” தென, நின்றதன்உளே
            மொகுமொ கென்றுஒரு முழங்கொலிதழங்கிஎழவே,     

(417)

    ‘மொகு மொகு’ என்ற ஒலிக்குறிப்பு தக்கயாகப்பரணி 90, கலிங்கத்துப்பரணி 100 லும் உளது

    இரணியன் வதைப்படலம் 129