பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

65

New Page 1

        “மலைகுலுங்கின; நெடுந்திசை சுழன்றன; அரா
            மகுடபந்திகள் அதிர்ந்தன; எதிர்ந்து விரிநீர்
        அலைகலங்கின; எழுந்தஒலி என்கொல்இது; எனா
            அதிசயங்கொடு மயங்கினது அடங்க உலகே.         

(418)

    அரா மகுட பந்திகள்: பூமியைத்தாங்கும் நாகங்களுடைய கிரீட வரிசைகள்

        மதிக லங்கினர் நிலங்கொள விழுந்து நிறைசூல்
            வயிறு டைந்து உடல்குலைந்து அசுரர்மங் கையரெலாம்;
        எதிர்எ ழுந்துஒலி அஞ்சினர் இரங்கி அழுதார்,
            “இடைவி ழுந்தது இதுஎன்கொல்? இதுஎன்கொல்?”
                                          எனவே.    

(419)

        உயிர்இழந்தன பசுங்குழவி என்று குலைவார்;
            உகம்முடிந்தது முடிந்ததென நின்று தளர்வார்;
        அயில்நெடுங்கண் மழைகொண்டு அறிவழிந்து அலறுவார்;
            அவர்அடங்க அசுரன் புரமடந் தையர்களே.     
    

(420)

        மகளிர் மைந்தரை அறிந்திலர் மயங்கி ஒருபால்;
            மகிழ்நர் பெண்டிரை மறந்தனர் கலங்கி ஒருபால்;
        அகல ருந்துயர் விளம்பும் அளவன்று தெளியா
            அசுரர் தம்பதி அலந்தலை விளைந்த படியே.     

(421)

        சி்கர மந்தர நெடுங்கிரி திரிந்து வருநாள்,
            திரைநெருங்கிய கருங்கடல் இரங்குவது போல்;
        நகர்க லங்க,ந வகண்டமும் நடுங்க, இடையே
            நனிதெளிந்த தென நின்றது இளமைந்தன் மனமே,     

(422)

        முறுகு வெஞ்சினம் விளைந்தெழ, வளர்ந்து நடுதூண்
            முறிய நின்றபடி கண்டுஇடி முழங்கும் ஒலியால்,
        மறுகு சிந்தை யொடுநின்ற ஒருதந்தை எதிரே
            மதலை, மண்டபம் லவங்கொடு வணங்கி வரவே,     

(423)

    ‘நடுதூண்’ இரணியனே நட்டதூண்; ஆதலின், எவரும் ஒளிந்திருக்க ஏதுவில்லை ‘அளந்திட்ட தூணை அவன் தட்ட’ ( பெரியாழ்வார் திருமொழி 1. 6. 9 வியாக்யானம் )

        அருகுநின் றஒருசம் பரன்ஒழிந்த, அவுணராம்
            அவர் அடங்கலும் இரிந்தபடிகண்டு, நுதல்மேல்
        இருகரும் புருவமும் குனியநின்று, தனியே
            இரணியன்தரணி அஞ்சிட இயம்பும் இவையே:        

(424)