ஏவன
ஏவன்அடா தூணிடைவந்து
என்எதிரே நகைசெய்தாய்?
காவல்நடாத் தியசெங்கோல்
கைவிட்ட திருமாலோ?
(425)
‘ஏவன்’: எவன் முதல் நீண்டது. ‘காவல் நடாத்திய செங்கோல்’:
திருமால் காவல் கடவுள் ஆதலின்.
“மால்ஆனார் நகைசெய்தல்
மரபுஎன்று நகைத்தாயோ?
மேல்ஆனார் நகைசெய்தல்
விட்டவரை நகைத்தாயோ?
(426)
‘மால் ஆனார்’: சிலேடையால், பித்தர்.
“கருங்கடலில் கருடன்அவன்
கால்விசையால் பலவிசைபோய்,
ஒருங்குஅடலில் தோற்று ஒளித்தாய்!
உன்னைமறந்து உறங்கினையோ?
(427)
இரணியன் வதைப்படலம் 49
“கருங்கட லிடைஒளித்த
கள்வா!என் கைப்பட்டாய்!
உறங்குஇனிநீ! ஒருநாளும்
உணராமல் உறங்குதிநீ!
(428)
“மிக்குஅடலில் உடைந்தோடும்
விரிஞ்சனுடன் விடையேறி,
அக்கடலில் வந்திலரோ?
அவர்தோற்றது அறிந்திலையோ?
(429)
“தந்திரமாய் அவர்கள் வரத்
தானவ ரும் வானவரும்
இந்திர னும் தோற்ற கதை
இந்நெடு நாள் கேட்டிலையோ?
(430)
“மிக்கு உடைவாள் எடுப்
பாரும்
வெண்குடைகள்
பிடிப்பாரும்
திக்குளவா னவர் முதலாம்
தேவர் எனத் தெளிந்திலையோ?
(431)
|