New Page 1
“சங்க வரி வளைகரத் தால்
தனிக்கவரி பணிமாறும்
அங்கவர் தம் இளம்
பிடியார்,
அகம் படி என்று அறிந்திலையோ?
(432)
“அரணியன்ற கள வேள்வி
ஆகுதி செய் புவி யனைத்தும்,
இரணியனது எனும் வார்த்தை
இந்நெடு நாள் கேட்டிலையோ?
(433)
“எட்டெழுத்தும் அஞ்செழுத்தும்,
ஈரேழு புவியனைத்தும்
கட்டுரைக்கை தவிர்த்தபெருங்
கட்டாண்மை கேட்டிலையோ?
(434)
எட்டெழுத்து: திருமால் மந்திரம்.
அஞ்செழுத்து: சிவபெருமான் மந்திரம்
“சேணிடையில் வானவர் என்
சேவகங்கள் அறியாரோ?
தூணிடையில் ஒளியாது
தோன்றுக” என்று எழுந்தனனே.
(435)
“தானவரை அழைக்க” எனச்
சம்பரனை முனிந்தனனே;
“வானவரை அழைக்க” என
வாள் எடுத்து விதிர்த்தனனே.
(436)
வாளுடைய கரதலத்தால்
மணிக்கடகு வாங்கினனே;
தாளுடைய வடமலை போல்
சலியாது நின்றனனே.
(437)
“போர்த்தொழிலுக்கு இசைந்தனையேல்,
புறப்படு, நீ புறப்படு”
என
ஆர்த்து, அவுணன் அகில தலம்
அலம்வர முன் நின்றனனே.
(438)
|