பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

68

12

12. போர் பாடியது

        திமிரம் அகலவரு பகலை நகஉரிய
            பெரிய திருவுருவம் அதனுளே,
        நிமிரும் அளவில், இடை உடலம் நெறுநெறென
            நெடிய தறி வயிறு கிழியவே,          
     

(439)

        கழலும் அழகுவளர் புயமும் இருகமல
            கரமும் நரர்வடிவ உருவுமாய்,
        அழலும் நயனம்எரி சுழலும் நுதல் வதனம்
            அடைய அரி உருவு தெரியவே,                   

(440)

கழல், புயம், கரம் இவை நரவடிவு; நயனம், நுதல், வதனம் இவை அரி உரு.

        உடுவும் உடுபதியும் உதிர, உரகதலம்
            அதிர, உரறி எழு பெரியவாய்
        வெடுவெ டெனநகையில் விரவிஎழு புகையில்,
            மிகையில் வெயில் இரவி கருகவே,
            

(441)

        விரைகொள் துளவுபுனை விகட தடமகுட
            விதமும், மணியும், மிகை நகையவாய்
        நிரைகொள் பிறைஎயிறும் முறையில் உமிழும் நிறை
            வெயிலும் இளநிலவும் நிமிரவே, 
              

(442)

மணி நிறை வெயிலையும், எயிறு இளநிலவையும் உமிழும்

        தெளிய ஒளிபெருகு வதன சினவலையம்
            அடைய மிடைகனல்கள் செறியவே,
        ஒளியை உமிழும் மதி வதன இளவெயிலில்
            அரிய உளைமயிர்கள் சரியவே,   
            

(443)

        விடலை யுடல்உரக சமுகம் உறுபசியின்
            வெருவும் இரை கவர வருவபோல்,
        நடலை செயும் அசுரன் உடலம் உகுகுருதி
            கருதி நக நிரைகள் விரையவே,                 

(444)

நக வரிசைகள் நாகங்கள் போல விரைந்து வரும்.

        உதிரம் உகு திகிரி, எதிரில் வளை, பகழி
            உமிழும் வரிசிலை, நல் அரசுவாள்,
        அதிர விசிறுகதை முதல வரு படைகள்
            அடைய முடுகி அருகு அணையவே,             

(445)

ஐம்படைகள் நரசிங்கத்தின் அருகு அணையும்.