அறஉ
அறஉடைய அசுரர்பதி
அடைய அழு வித்தே,
உறவுடைய அமரர்பதி
உவகை எழு வித்தே,
(534)
‘அழுவித்து’: அழச் செய்து. ‘அற உடைய’: முற்றும் அழிய
சம்பரனும் அவன்முதல்வன் தலைமைக் கேற்ற
சதகோடி தானவரும் தாமே
நிற்ப,
அம்பரமார் அலைகரந்து பரந்த
வெள்ளம்
ஆயிரகோ டியும்திருக்கை
அழிவுக் கிட்டே,
(535)
அரவுஉரும் என்றுஅலைகிளரக்
கிளர்செஞ் சோரி
அலைகடலில் அவுணர்பிணக்
குன்றம் ஏறி,
வி்ரவுநிணக் குடர்களுடன் குரவை
கோத்து
வேதாளம் வித்தாரத்து
ஆட விட்டே,
(536)
வருகின்ற நரசிங்க வடிவை நோக்கி,
வாளொடுகே டகம்சுழல,
வடபால் நின்ற
ஒருகுன்றம் இருதிங்கள் தழுவி,
ஓட்ட
உருத்தெழுவ தெனக்கனகன்
உடன்று எழுந்தே,
(537)
எயிறெரிய, நகைபுகைய, நயனச்
செந்தீ
எண்திசையும் பரந்தெரியக்
கண்டு, வானோர்
வயிறெரிய வரும்அளவில், எதிரே
சென்று
மைந்தன்அவன் கனைகழல்கீழ்
வந்து நின்று,
(538)
பிரகலாதன் மீண்டும் தந்தைக்கு அறவுரை கூறல் கம்பனில்
இல்லாதது.
“இவ்உருவம் கண்டும்இறை என்றுஇன்னும் தேறாய்!
எண்இறந்து படைஇறந்த தேதும்
பாராய்!
வெவ்உருவம் கண்டுஎந்தை
வெகுளா நின்றாய்!
விதிவலியே வலிதென்றால்
விலக்க லாமோ?
(539)
“இறையவன்நீ தான்பிழைத்தது
எல்லாம் நிற்க,
இத்தையொழித்து ஒருகால்அஞ்
சலித்துநீ இன்று
‘இறையவன்நீ என்உயிர்நின்
னுடையது என்னில்,
இன்னமும்நின் பிழைபொறுக்கும்”
என்னக் கேட்டே,
(540)
இதுவே இக்காவியத்தின் மையக்கருத்து. இரணியன் செய்த
தவறு இறைவனுக்கு உரிய உயிரையும் மக்களையும் தனது எனக்கருதியது. ‘ஆத்ம அபஹரணம்’ என்ற குற்றம்
என்பர்.
|