ஒ
ஒருவர்உடல் தலைகுறைய
ஒருவரை மலைத்தே,
அருவரையை நிகருமவர்
அடல்வலி தொலைத்தே,
(526)
இலகுபடும் அசுரர்உடல்
இடையிடை கிழித்தே,
உலகுபடும் உறுதுயரம்
இடைசிறிது ஒழித்தே,
(527)
அடவிபடு நெடுமுகடு
மலைபொடி படுத்தே,
இடமகியின் முதுகுபொறை
இறையிறை கெடுத்தே
(528)
‘அடவிபடு நெடு முகடு’: காடுகள் நிறைந்த உயர்ந்த சிகரம்.
சிகரமணி முடியவுணர்
சிலவரை எடுத்தே,
மகரம்ஏறி திரைஉவரி,
வடவையில் மடுத்தே
(529)
பிலவரைகள் அவை நுழையும்
அவர்பிடர் பிடித்தே,
குலவரைகள் அதிர எதிர்
குவடுஇற அடித்தே,
(530)
தருமஉணர்வு ஒழியுமவர்
தமைமண் விழுவித்தே,
வரும்அவுணர் படையடைய
வானில் எழுவித்தே,
(531)
பிண மலையின் முகடுகொடு
பெருவெளி மறைத்தே,
நிணம் அலைய வருகுருதி
நிலமிசை நிறைத்தே,
(532)
தொழுதுபடும் அசுரர் உயிர்
சுரர்உலகில் விட்டே,
பழுதுபடும் அசுரர் உயிர்
படுநரகில் இட்டே,
(533)
சரணம் அடைந்தவர்க்கு அருளலும் அடையாரை ஒறுத்தலும்.
|