ஆ
ஆனைபட்டு,இவுளி பட்டு,இரதம்
அற்று,இரிபடச்
சேனைபட்டபடி கண்டு,எதிர்
சினம்திருகியே,
(518)
மெய்யுடன் பொருத பொய்யென,
வெகுண்டு விழியா,
ஐயர்முன்பு அவுணர் வந்துஅமர்
பொரக் கருதவே,
(519)
நின்று சிங்கம் நகை செய்யுநிலை
கண்டு மறுகிச்
சென்று சம்பரன் எதிர்ந்து
எதிர்
சினம் திருகியே,
(520)
வந்துஇரைத்து,உடன் நடந்து,எதிர்
மலைந்து முடுகும்
தந்திரத்தலைமை வீரர்சத
கோடி யுறவே.
(521)
அலைஎறிந்து கடல் பொங்குவது
போலும் அவன்,மேல
்மலைஎறிந்து மலை பின்தொடர
வந்து அடையவே,
(522)
பேருயிர்ப் பொடு முடித்தலை
பிடித்து,ஒரு கையால்
ஆர்உயிர்ப் பொறை தரைப்படை
அடித்தருளியே,
(523)
கழுகு சம்பரன் விழிக்கடை-
களைக்கவரவிட்டு,
ஒழுகு செம்புனல் குடித்து,உளை
விரித்துஉரறியே,
(524)
சம்பரன் படை தரைப்படை
படத் தடவியே
வந்து எதிர்த்தவர் அகப்பட
வளைத்தணவியே
(525)
|