அடல
அடல்களிற்று அவுணர் விட்ட கைப்படை
வளைத்து மொய்க்க
வரும்போது
இடர்க் களத்திடை விலக்கி
நிற்பன-
இடத்திருக்கை பலவே.
(510)
துருத்தி யொத்து உடல் அடற்கழுத்தொடு
துரக்க எற்றி, விரை தோல்,
இருத்தி வைத்துஉகிர் மடுத்து
உரிப்பன-
இடத்திருக்கை பலவே.
(511)
தசைத் தடிக்கிடை சினத்தை வைத்துஉடல்
திரித்து இழுத்த குடலால்
இசைத் தலத்தொடை கொடுத் தெடுப்பன-
இடத்திருக்கை பலவே.
(512)
மாமிசத்துண்டில் சினம் வைத்து, உடலைத்திரித்து, குடலை
இழுத்து, தாளக் கயிறாகக்கொள்ளும் இடத்திருக்கை.
அத்திருக்கைகளில் அப்பொழுது
தப்புமவரைச்
செத்திருக்கும்வகை பார்த்து,எதிர்
சிரித்தருளியே,
(513)
மிக்க தாள்அவுணர் தானையை
விடாது, கழலால்
ஒக்க வார்குருதி வேலையின்
மசித்து உரறியே,
(514)
நின்று சோணிதம் நிறைத்து,அவுணர்
நீடிய பதிக்கு,
அன்று சோணித புரப்பெயர்
அளித் தருளியே,
(515)
எக்கர் வார்குருதி யால்,இரு
நிலத்தெரிவையைச்
செக்கர் ஆடை புனை தந்தருள்
சிறப்பருளியே,
(516)
வாரியிற் பெரிய செங்குருதி
மா கடலெல்லாம்,
ஓர் உயிர்ப்பொடு புலர்ந்திட
உயிர்த்த
ருளியே,
(517)
|