(வி-ம்.) மணி - இரத்தினம். இனைய - இத்தன்மையனவாகிய. கனகம்- பொன். மகரக்குழை - சுறாமீன் வடிவான காதணி. நீலமணியும் வைரமும் பதித்தமையின் இருளும் வெயிலும் எறித்தன வென்க. பிடி - பெண் யானை. பகடு -ஆண் யானை. மனங் கவரும் இயல்பு வாய்ந்தமை குறிக்க உள் பகடு என்றார்.அரிவையர்-பெண்கள். பட்டம், நெற்றிப்பட்டம். (24) இதுவும் அது | 336. | ஏறி யருள வடுக்குமிந் நூறு களிறு மிவற்றெதிர் | | | ஏனை யரச ரொருத்தரோ ரானை யிடுவ ரெனிற்புவ மாறி அருள அவர்க்கிடை யாமும் இசைவம் எனப்பல மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே. |
(பொ-நி.) நூறு களிறும் ஏறி அருள அடுக்கும். இவற்று எதிர் ஓர் ஆனை இடுவர் எனில் அவர்க்கு இடை இசைவம் என உரைப்பார்; (எ-று.) (வி-ம்.) அடுக்கும் -தகுதியாகும். எதிர்-எதிராக(ஒப்பாக). மாறி-விற்று. அருள் (யானை) கொடுத்த. அவ்வவர்க்கு எனற்பாலது அவர்க்கு என நின்றது. இடை - சமமாக. இசைவம் - கொடுக்க இயைவோம். மானம் -பெருமையினையுடைய. வாழ்வு-தங்கள் நல்வாழ்வு. (25) திறைபெற்ற குலோத்துங்கன் வினாயது | 337. | அரசர் அஞ்சலென அடியி ரண்டுமவர் | | | முடியின் வைத்தருளி அரசர்மற் றுரைசெ யுந்திறைகள் ஒழிய நின்றவரும் உளர்கொ லென்றருளு பொழுதிலே. | (பொ-நி.) 'அஞ்சல்' என, அடிமுடியின் வைத்தருளி "அரசர் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்கொல்" என்று அருளு பொழுதினில்; (எ-று.) (வி-ம்.) அரசர் அஞ்சல் - அரசர்களே அஞ்சாதீர் அல்- எதிர்மறை வியங்கோள். அவர்முடி - அவ்வரசர்கள் தலையின் மேல். உரைசெயும் - சொல்லப்படுகின்ற. திறைகள் ஒழிய நின்றவர் - திறைசெலுத்தாதவர். அருளுதல் - கேட்டருளுதல். (26) |