| வினாயதற்கு மறுமொழி | 338. | கடவ தந்திறைகொ டடைய வந்தரசர் | | | கழல்வ ணங்கினர்கள் இவருடன் வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை வருகி லன்திறைகொ டெனலுமே. |
(பொ-நி.) அரசர் திறைகொடுவந்து வணங்கினர், கலிங்கர் பதி வருகிலன் எனலும்; (எ-று.) (வி-ம்.) கடவ-செலுத்தக் கடவதான. அமைந்து ஒரு சேர. வட கலிங்கர் பதி-வடக்கிலுள்ள கலிங்க நாட்டு வேந்தன். இரண்டு விசை-இருமுறை. அதுகேட்ட குலோத்துங்கன் நிலை | 339. | உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர் | | | உயிர்ந டுங்கஒளிர் பவளவாய் முறுவல் கொண்டபொருள் அறிகி லம்சிறிதும் முனிவு கொண்டதிலை வதனமே. |
(பொ-நி.) அரசர் "என்கொல்" எனக் குலைந்து நடுங்க பவளவாய் முறுவல் கொண்டபொருள் அறிகிலம்; வதனம் முனிவு கொண்டதிலை; (எ-று.) (வி-ம்.) உறுவது - நேரப்போவது. முறுவல் -புன்னகை, எள்ளியதால் எழுந்தது. முனிவு-சினம். வதனம்-முகம். (28) குலோத்துங்கன் இட்ட கட்டளை | 340. | எளியன் என்றிடினும் குன்றரணம் | | | இடிய நம்படைஞர் கடிதுசென் றனிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மின் எனலுமே. |
(பொ-நி.) "எளியன் என்றிடினும், குன்றரணம் வலிய;் படைஞர் சென்று மதமலைகள் கொண்டு அணைமின்; அவனையும் கொணர்மின் எனலும்; (எ-று.) |