அடர்த்து எறிதல் - நெருங்கிமோதுதல்; நெருங்கி அழித்தல். வஞ்சி மானதன்-வஞ்சி சூடிய குலோத்துங்கன். படை - வேற்படை. கண் மடநலீர்: இரண்டன் உருபும் பயனும் தொக்க தொகை, கண்ணின் பிறழ்ச்சி கூறப்பட்டது. மகளிர் கண்ணிற்கும் குலோத்துங்கன் படைக்கும் சிலேடை வகையால் ஒப்புமை கூறியதாம். (12) புணர்ச்சி நிலை கூறி விளித்தது | 33. | அவசமுற் றுளம்நெகத் துயில்நெகப் பவளவாய் | | | அணிசிவப் பறவிழிக் கடைசிவப் புறநிறைக் கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும் கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ. | (பொ-நி) உளம்நெக, துயில்நெக, வாய்சிவப்புற, விழிக்கடை சிவப்புற, களிநகை வர புணருவீர் திறந்திடுமின்; (எ-று.) (வி-ம்.) அவசம் - பரவசம். நெக - இளக. துயில் - தூக்கம். நெக- தொலைய. அற-நீங்க. சிவப்புற-செம்மை நிறம் கொள்ள. நிறைக்கவசம்- நிறையாகிய மனக்கட்டு. அற்று-அழிந்து. களி-களிப்பால். இளநகை- புன்முறுவல். களிவரும் - களிப்படையும். புணர்ச்சியில் ஊடல் வேறுபாடு கூறியவாறு. காமவேட்கை கொண்ட மகளிர் அச்சம் நாணம் முதலிய மகடூஉக் குணங்களை யிழத்த லியல்பாதலால் 'நிறைக் கவசமற்று' என்றார். (13) கலவி மயக்க நிலை கூறி விளித்த | 34. | கலவிக்களியின் மயக்கத்தாற் | | | கலைபோய் அகலக் கலைமதியின் நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர் நீள்பொற் கபாடந் திறமினோ. | (பொ-நி) களியின் மயக்கத்தால், கலை அகல, நிலவை எடுத்து உடுப்பீர் திறமின்; (எ-று.) (வி-ம்) கலவி - புணர்ச்சி. களி-கள்ளுண்டு களித்தது போன்ற மிகு மகிழ்ச்சி. கலை - ஆடை. அகல - உலைந்துபோக; மதி-நிலா. நிலவு-நிலா வொளி. துகில்-ஆடை. உடுப்பீர் - அணிவீர். நிலவொளியைத் துகிலாகக் கருதினர் என்க. (14) |