காமமயக்கநிலை கூறி விளித்தது | 35. | நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர் | | | நனவெனக் தெளிவுறாது அதனையும் பழையஅக் கனவெனக் கூறுவீர் தோழி மார் நகைமுகங் கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ. |
(பொ-நி.)புணரவே பெறினும், நனவெனத் தெளிவுறாது, கனவெனக் கூறுவீர்; நகைமுகம் கண்டபின் தேறுவீர் திறந்திடுமின், (எ-று.) (வி-ம்.)நனவு - விழித்திருக்கும் நேரம். சயதரன்-குலோத்துங்கன். தெளிவுறாது - தெளியாமல். அது - புணர்ச்சி. நகை -நனவைக் கனவெனக் கூறியதைக்கேட்டு எள்ளி ஆடிய நகை. தேறுவீர்- தெளிவீர். நனவையும் கனவென மயங்கினர். இவ்வாறு மயங்கக்காரணம் பழைய கனவை இடைவிடாது எண்ணியிருந்தமையே என்க. (15) ஊடலும் கூடலும் விழைந்த இயல்புகூறி விளித்தது | 36. | மெய்யே கொழுநர் பிழைநலிய | | | வேட்கை நலிய விடியளவும் பொய்யே உறங்கும் மடநல்லீர் புனைபொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.) பிழை நலிய, வேட்கை நலிய, பொய்யே உறங்கும் மடநல்லீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். நலிய - மனத்தை வாட்ட. வேட்கை- கலவி வேட்கை. உறங்கல் - தூங்கல். ஊடினாராயினும் புணர்ச்சி வேட்கையால் உறங்காராயினர். பொய்யாகவுறங்குதலாவது கண் மூடியவாறு கிடத்தல். (16)கலவி மயக்கநிலை கூறி விளித்தது | 37. | போக அமளிக் களிமயக்கில் | | | புலர்ந்த தறியா தேகொழுநர் ஆக அமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.) களி மயக்கில், புலர்ந்த தறியாதே, ஆகஅமளி மிசைத் துயில்வீர் திறமின்; (எ-று.) |