(பொ-நி.) அத் தண்டு. கலிங்கர் பூமி, அரணம் உடைத்தென்று கருதாது வருவது போலும்; (எ-று.) (வி-ம்.) கான்-காடு; அரண் - பாதுகாப்பு. தண்டு-சேனை. (66) அமைச்சன் மொழிந்தது | 378. | என்று கூறலும் எங்க ராயனான் | | | ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான். |
(பொ-நி.) கூறலும், "எங்கராயன் கூறுவன், கேள்" என்று உணர்த்துவான்; (எ-று.) (வி-ம்.) எங்கராயன்: அமைச்சனும் படைத்தலைவனுமானவன். (67) இதுவும் அது | 379. | அரசர் சீறுவ ரேனும்அடியவர் | | | உரைசெ யாதொழி யார்க ளுறுதியே. |
(பொ-நி.) அரசர் சீறுவரேனும், அடியவர் உறுதி உரை செயாது ஒழியார்கள்; (எ-று.) (வி-ம்.) சீறுதல்-சினங்கொள்ளுதல். அடியவர்: அமைச்சர் முதலியோர். உறுதி-நன்மை பயப்பன. (68)166 இதுவும் அது | 380. | ஏனை வேந்தை யெறியச் சயதரன் | | | தானை அல்லது தான்வர வேண்டுமோ. |
(பொ-நி.) எறிய, சயதரன் தானையல்லது தான் (அவன்) வரவேண்டுமோ? (எ-று.) (வி-ம்.) ஏனை வேந்து - மற்ற அரசர். எறிய - அழிக்க. சயதரன் - வெற்றியையுடையவன்; ஈண்டு முதற் குலோத்துங்கன். (69) இதுவும் அது | 381. | விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் | | | கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ. |
|