பக்கம் எண் :

150கலிங்கத்துப்பரணி

     
    
(பொ-நி.) குழறியும், பதறியும், முறையிட்டு, துகில்விழ, சனபதி அடியில்
புக விழு பொழுதத்து; (எ-று.)

    
 (வி-ம்.)  குழறி-சொற்கள்  தடுமாறி.  பதறி-கடுக்கங் கொண்டு. துகில்-ஆடை. அடைய-எல்லாம். சனபதி-அரசன். அடி-பாதம்.            (63)

கேட்ட கலிங்க வேந்தன் செயல்

375.அந்தரமொன் றறியாத வடகலிங்கர்
      குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
     கைபுடைத்து வியர்த்து நோக்கி.

     (பொ-நி.)  அறியாத   வேந்தன்  அனந்த  பன்மன்  வெய்துயிர்த்து,
கைபுடைத்து வியர்த்து நோக்கி; (எ-று)

     (வி-ம்.) அந்தரம்-முடிவு.  தறுகண்-கொடுமை  மிக்க. வெகுளி-சின்னம்.
வெய்து உயிர்த்து-பெருமூச்சுவிட்டு. கைபுடைத்து-கைகொட்டி.       (64)

கலிங்க வேந்தன் மொழிந்தது

376.வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும்
      மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
     தடம்புயங்கள் குலுங்க நக்கே.

     (பொ-நி.) கொடுக்கும் அபயற்கன்றி,  தண்டினுக்கும்  எளியனோ  என
வெகுண்டு நக்கு, (எ-று.)

     (வி-ம்.) யானை  மதம்:  ஆறன்   தொகை.  மலர் கவிகை - பரந்த
வெண்கொற்றக்குடை.   கொடுக்கும்   அபயன்  என்க.   இதனால்  அவன்
அரசாட்சியின் பரப்புக் கூறியவாறாம். தண்டு -(அவனது) சேனை. தடம்புயம்-
பெருத்த தோள்கள்.                                       (65)

இதுவும் அது

377.கானரணும் மலையரணும் கடலரணும்
      சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
     வருவதுமத் தண்டு போலும்.