பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது149


     (வி-ம்.) கடல்போல்  வந்தபடையாதலின், அதன் பெருக்கத்தால், அது வடக்கின்கண் கங்கையும்    அணித்தாம்படி    பரவி நின்றதுபோல் காணப்பட்டதென்க. புகல்இடம் - செல்லுதற்கேற்ற  இடம். அரண்-பாதுகாவல். அதிபதி-அரசன்.                                           (60)

இதுவும் அது

372.இடிகின் றனமதில் எரிகின் றனபதி
      எழுகின் றனபுகை பொழிலெல்லாம்
மடிகின் றனகுடி கெடுகின் றனமினி
     வளைகின் றனபடை பகையென்றே

     (பொ-நி.)   இடிகின்றன,   எரிகின்றன,   எழுகின்றன,   மடிகின்றன,
கெடுகின்றனம் வளைகின்றன என்றே; (எ-று.)

     (வி-ம்.) பதி-ஊர்.  பொழில்-சோலை.  மடிகின்றன-அழிக்கப்படுகின்றன.
வளைகின்றன - சுற்றிக்கொள்கின்றன.  கெடுகின்றனம்:  தன்மைவினை; பகை
படை எனஇயைக்க.                                         (61)

கலிங்கர் அரசனிடம் முறையிட்டது

373.உலகுக் கொருமுதல் அபயற் கிடுதிறை
      உரைதப் பியதெம தரசேயெம்
பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு
     படைமற் றவன்விடு படையென்றே.

     (பொ-நி.)   அரசே,   இடுதிறை  உரைதப்பியது;  எம் கற்பனைகளை
நினைவுற்றிலை; வருபடை அவன் விடுபடை என்று; (எ-று.)

     (வி-ம்.)  உலகுக்கு  ஒரு  முதல் - உலகத்துக்கு  ஒப்பற்ற  தலைவன்.
அபயன்   - (குலோத்துங்க)  சோழன்,    பயமில்லாதவன்  என்று பொருள்;
சோழமன்னன்   யார்க்கும்      அஞ்சாதவனாகலான்,        இப்பெயரால் 
அழைக்கப்பெற்றான். உரை தப்பியது -சொல்தப்பியது. கற்பனை  முன்னறிந்து 
சொல்லிய  சொல். அவன்: குலோத்துங்கன்.                     (62)
 

இதுவும் அது

374.உரையிற் குழறியும் உடலிற் பதறியும்
      ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ அடையச் சனபதி
     அடியிற் புகவிழு பொழுதத்தே.