பக்கம் எண் :

22கலிங்கத்துப்பரணி

பொருந்திய.  கருவிளம் - கருவிள  மலர்  போன்ற  கண்கள்.  நீர்பட -
கண்ணீரைப் பொருந்த. ஊடுவீர் - கணவரொடு  புலப்பீர்.  முலை நீர்மை
கெடவும்,  கண்நீர் படவும் ஊடினர் என்க.  செருவிளநீர் படுதல் - பசலை
கொண்டு நிறவேற்றுமையைப் பெறுதல்.                          (32)

கலவி நிலைகூறி விளித்தது

53.அளக பாரமிசை அசைய மேகலைகள்
    அவிழ ஆபரண மிவையெலாம்
இளக மாமுலைகள் இணைய றாமல்வரும்
   இயன லீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.)  அளகபாரம்  அசைய,  மேகலைகள்  அவிழ, ஆபரண மிவையெலாம் இளக, முலைகள் வரும் இயல் நலீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.)அளகம் - கூந்தல்.  பாரம் - சுமை;  மிகுதி. மிசை-மேலே.
மேகலை - இடை  அணி.  இளக - நெகிழ. மா-பெரிய. இணை அறாமல்-
ஒன்றோடொன்று    உயர்வு    தாழ்வின்றி.   வரும் - வளரும்.  இயல்-
இயல்பினையுடைய.   நலீர் - நல்லீர்;  பெண்களே.  கலவிக்கால  இயல்பு கூறப்பட்டது.                                              (33)  

இதுவும் அது

54. மதுர மானமொழி பதற வான்விழிசி
    வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகஅறி
   வழியு மாதர்கடை திறமினோ.

     (பொ-நி.)மொழி பதற, விழி சிவப்ப, இதழ் வெளுப்ப, அதரபானம் மதுபானமாக அறிவழியும் மாதர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) மதுரம் - இனிமை.  மொழி - சொல்.பதற-தடுமாற. வாள்-
ஒளிபொருந்திய.  இதழ் - உதடு.  அதரம் - உதடு.  பானம் - பருகுவது.
மதுபானம் -கள்.  இதுவும்  கலவி  இயல்பு   கூறியது.கள்ளுண்டார்க்கும்
கலவியில்  திளைத்தாகக்கும்  சொல்  தடுமாறுதலும், கண்கள் சிவத்தலும்,
வாயிதழ்கள்  வெளுத்தலும்   இயல்பு.   ஆகலான்  இரண்டு  நிலையும்
ஒன்றார் இணைத்துக் கூறினார்.                               (34)