பக்கம் எண் :

கடை திறப்பு21


     (பொ-நி)  கழுநீரும்,   இளைஞர்   உயிரும்   திருகிச்   செருகும்
குழன்மடவீர் திறமின்; (எ-று.)

 
    (வி-ம்.)முருகு - மணம். கழுநீர் - செங்கழுநீர்ப்பூ. திருகி-முறுக்கிப்
பறித்து. குழல் - கூந்தல். கழுநீர் மலரையும் இளைஞர் உயிரையும் தங்கள்
கூந்தலில் வைத்துச் செருகினர் என்க.  இளநங்கையர்  தம்மைப் புனைந்து
கொள்ளற்குக் கழுநீர்ப்பூ முதலியவற்றைப் பறித்துத் தம் கூந்தலிலணிதலும்
அவர்பால்  காதல் கொண்ட காமுக ஆடவர் இவரை நினைந்து நினைந்து
உருகி  உயிர்ப்பாரம்  குறைவராதலால்  இவ்விரண்டுக்கும் ஒப்பத் 'திருகிச்
செருகும் குழல்' என்றார்.                                     (30)

கூடல் இழைத்த இயல்பு கூறி விளித்தது

51. மெய்யில ணைத்துருகிப் பையஅ கன்றவர்தாம்.
     மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்துஅறவே
கையில ணைத்தமணல் கண்பனி சோர்புனலில்
   கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின் .

    (பொ-நி)  அகன்றவர்   மீள்வரெனக் கருதி,   கூடல் விளைத்து,
அறவே, மணல் புனலில் கரைய அழுவீர் திறமின்; (எ-று.)

    (வி-ம்.) மெய் - உடல்.  அணைத்து - தழுவி. உருகி-மனம் உருகி
(க் காட்டி) பைய - மெல்ல. அகன்றவர் - பிரிந்தவர். கையில் அணைத்த-
கைகளினால் சேர்த்த.  கூடல் விளைத்தல்- மணலில் சுழித்துக் குறியறிதல்.
அறவே - சுழியாமல்  நீங்கி  நிற்க.  புனல்-நீர.்  கூடல் இழைத்த மணல்
கண்ணீரால்  கரைந்தது. கூடற்சுழி கூடாமற் போகவே கணவர் விரைவில்
வந்து  கூடாரென  மிகுதியாக வருந்தலாயினர் என்க.             (31)

ஊடல் இயல்பு கூறி விளித்தல்

52. செருவிள நீர்பட வெம்முலைச்
     செவ்விள நீர்படு சேயரிக்
கருவிள நீர்பட ஊடுவீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.

    (பொ-நி)செவ்விளநீர் செரு இளநீர்பட, கருவிளம் நீர் பட ஊடுவீர்
திறமின்; (எ-று.)

    
(வி-ம்.)செருஇளநீர் - கலவிப்போர்க்குரிய  எழுச்சியுள்ள  தன்மை.
பட -கெட. வெம்முலையாகிய செவ்விளநீர் என்க. சேயரிபடு என இயைக்க.
சே அரி-சிவந்த கோடுகள். படு-