அலங
2 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
அலங்கல்-மாலை,
களவீசன்-(திருக்கருவையில்) களாமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். நளினம் - தாமரை.
தானம் - மதம். தடம் - பெருமை (ஈண்டு நீளப் பெருமை). தறு கண் - அஞ்சாமை. புகர் - (யானை முகத்தில்
உள்ள) புள்ளிகள். கூனல் - வளைவு. குஞ்சரம் - யானை.
ஆன - இறந்தகாலப்
பெயரெச்சம். நளினசரணம், குண குஞ்சரம் - என்பன வடமொழித் தொடராதலின் இயல்பாய்ப் புணர்ந்தன.
பிறை - தொழிலாகு பெயர்; பிற-பகுதி, ஐ-விகுதி, அகரக்கேடு சந்தி.
யானை முகத்தராதலால்
விநாயகரைக் ‘குஞ்சரம்’ என்றார். ஈறும் முதலும் ஒன்றி மண்டலித்து மாலைபோல முடிதலின் ‘அந்தாதியான
சொல்லலங்கல்’ என்றார். அந்தாதியாகத் தொடராவிடத்தும் சொற்களின் தொடர்ச்சியை மாலை
என்றல் மரபு: சொன்மாலை பயில்கின்ற 'குயிலினங்காள்’ என வருதல் காண்க.
குணவிநாயகர் என்பது
திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் விநாயகரது சிறப்புப் பெயர்போலும்: அன்றேல் அருட்குண முடையரான
விநாயகர் என்று கொள்க.
எடுத்த நூல்
இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு முதற்கண் விநாயகவணக்கம் கூறுதல் மரபாதலால், அம் மரபே பற்றி
ஈண்டு விநாயகவணக்கம் கூறப்பட்டது. தம்மை முன் நிறுத்தி வழிபட்டு ஒரு கருமஞ் செய்யப்
புகுவோர்க்கு அக் கருமத்தில் நேரிடக்கூடிய விக்கினங்களை நீக்கும் காரணம்பற்றி விநாயககர்க்கு
‘விக்கின விநாயகர்’ என்று பெயர் வழங்குதலும் காண்க. விக்கினம்=இடையூறு.
விநாயகருக்கு யானைமுகம்
வந்த வரலாறும், நூலின் அகத்து ஆண்டாண்டுச் சுட்டப்படும் பிற வரலாறுகள் பலவும் தொகுப்பாக நூலிறுதியில்
புறனடையாகச் சேர்க்கப்பட்டுள்ளன ; கண்டு கொள்க. புறனடை - அனுபந்தம்.
|