பக்கம் எண் :

நூல

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

3

நூல்

முதற்பத்து

மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களாகவும்
மற்றைய நான்கும் மாச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

1.   சீரார் கமலச் சேவடி என்
        சிந்தை இருத்தி, உனதுதிருப்
    பேர்ஆ யிரமும் எடுத்தோதிப்
        ‘பெம்மான்! கருவை எம்மான்!’ என்(று)
    ஆரா அமுதம் உண்டவர்போல்
        அனந்தா னந்தத் தகம்நெகிழ
    ஆரா இன்பம் அறிவித்தாய் :
        அறியேன் இதற்கோர் வரலாறே.

    (உனது) அழகமைந்த தாமரைபோன்ற செவ்விய திருவடிகளை என் உள்ளத்தில் பதித்து, உனது ஆயிரம் திருநாமங்களையும் எடுத்துக் கூறி, ‘பெருமானே ! திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் எமது இறைவனே!’ என்று துதித்து, தெவிட்டாத அமுதம் உண்டவர்போல அளவில்லாத ஆனந்தத்திலே உள்ளமானது உருகித் தோய, (யான் இதுகாறும்) அனுபவித்தறியாத இன்ப நிலையை எனக்குக் காட்டி யருளினாய். இவ்வருட்செயலுக்கு ஆனதொரு காரணம் யாதோ, அறியேன்!

    அந்தம் - முடிவு ; அனந்தம் - முடிவில்லாதது ; அநந்த ஆனந்தம் - முடிவில்லாத இன்பம் ; அஃதாவது பேரின்பம், வரல்ஆறு - வருதற்கானவழி ; அஃதாவது காரணம். பேரின்பத்தில் உள்ளம் உருகுதலாவது, தான் என்னும் தன்மைகெட்டு இன்பமயமாய்