பக்கம் எண் :

4

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

நிற்பது, ஆர்தல் - நிறைதல் - தெவிட்டுதல். ஆரா இன்பமாவது அனுபவியாத இன்பம் ; இங்கே ஆர்தல் - அனுபவித்தல். தன் அனுபவத்துட் படாத ஒன்றைப் பிறர் அறிவிக்க அறிந்து அனுபவித்தல் இயல்பாதலின் ‘ஆராவின்பம் அறிவித்தாய்’ என்றார். ‘பேரின்பநிலையை எனக்கு நீ அறிவித்தது எனது முற்பவ நல்வினைப் பயனாலோ, அன்றி நினது பேரருட் பெருக்கத்தாலோ அறியேன்’ என்பார் ‘வரலாறு அறியேன்’ என்றார். ‘வாரா இன்பம்’ எனக்கொண்டு பொருளுரைப்பது முண்டு. மோனையின்பமும் பொருட்சிறப்பும் நோக்கி ஏற்றவாறு கொள்க.

    தொடக்கத்தில் மங்கலமொழி வகுத்துக் கூறும் மரபுபற்றி இந் நூலும் ‘சீர்’ என்னும் மங்கலமொழியால் தொடங்கப்பட்டுள்ளது.         

(1)

2. ஆறாக் காமக் கொடியகனல்
        ஐவர் மூட்ட அவலமனம்
    நீறாய் வெந்து கிடப்மேனை,
        நின்தாள் வழுத்த நினைவுதந்து
    மாறா நேயத் திரவுபகல்
        மறவா திருக்க வரமளித்தாய் ;
    சீறா டரவம் முடித்தசடைக்
        கருவை வாழும் செழுஞ்சுடரே !

    சீறி ஆடும் பாம்பினைத் தரித்த சடையையுடைய, திருக்குரவையில் எழுந்தருளி யிருக்கும், நிறைந்த ஒளிப் பிழம்பே ! என்றும் அவியாத காமமாகிய கொடிய நெருப்பை ஐம்புலன்களும் வளர்க்க, கேடுற்ற மனம் (அதனால்) நீறாகும்படி வெந்துகிடக்கும் எனக்கு, உனது திருவடிகளைத் துதிக்க நினைவு கொடுத்து, மாறுபடாத உனது திருவருளாலே, (உனது திருவடிகளை வழுத்தும் செயலை