பக்கம் எண் :

மூலமும் உரையும்209

(க - து.) நளன், தமயந்தியுடன் சேருங்கால், அவள் கொங்கைமுகங்கள் நளன் மார்பில் அழுந்தின; அவள் கண்கள் செவிவரை ஓடின; கைவளையல்கள் அசைந்தொலித்தன; கூந்தல் சோர்ந்தது என்பதாம்.

(வி - ரை.) கொங்கை முகம் - கொங்கையினது முகம் என விரித்து ஆறன்தொகையாகக் கொள்க. கலவி நிகழுங்கால் கொங்கைகள் பொருந்தல், கண்பார்வை காதலர்பால் செல்லல், கைவளையல்கள் உராய்ந்தொலித்தல், கூந்தல் சோர்தல், முதலியன நிகழ்தல் இயற்கைத்தாதலின், அவ்வியற்கை முறை பிழையாது படிப்படியாகக் கூறினாரென்க. குழைய தடவ ஆட முதலிய செயவெனெச்சங்கள் காரணப்பொருட்டாக நிகழ்காலங் காட்டின.(170)

நளன், தமயந்தியோடு குண்டினபுரத்தில் நெடுங்காலம்
கூடியிருந்தான் எனல்

178. தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையகம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடித்ததற்பின் வாள்நுதலும் தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு.

(இ - ள்.) தையல் தளிர்க்கரங்கள் - தமந்தியினுடைய மாந்தளிர் போன்ற கைகளை, தன் தடக் கையால் பற்றி - தன் பெரிய கைகளினாற் பிடித்து, வையம் முழுதும் மகிழ்தூங்க - உலகமக்கள் யாவரும் மகிழ்ச்சியில் திளைக்க, துய்ய மணம் முடித்ததன்பின் - சிறந்த திருமணம் செய்தபின்னர், வாள்நுதலும் தானும் - ஒளி பொருந்திய நெற்றியையுடையவளாகிய தமயந்தியும் நளமன்னனுமாக, புக்கு நெடுங்காலம் புணர்ந்தான் - அங்கேயே தங்கி நீண்ட காலம் சேர்ந்திருந்தான்.

(க - து.) நளன் தமயந்தியை உலகமக்கள் மகிழும் படி திருமணஞ் செய்து நெடுங்காலம் அங்கேயே இன்புற்று வாழ்ந்திருந்தான் என்பதாம்.

(வி - ரை.) தையல் - தமயந்தி: அழகுடையாள் என்பது பொருள். தளிர் - இள இலை யென்னும் பொதுப் பெயராயினும் ஈண்டு மாந்தளிர் என்று மென்மையும் நிறனும்பற்றிப் பொருள் கூறப்பட்டது. தளிர்க்கரம்: உவமத் தொகை. வையம்: இடவாகு பெயராய் மக்களைக் குறித்தது. தடக்கையால் பற்றல் -

ந. - 14.