பக்கம் எண் :


டிருந்ததனால் ‘மாறன்’ எனப்பட்டார். இவர் பராங்குசன், நாவீறுடையபிரான், வகுளப்பிரான், குருகைப்பிரான், சடகோபர் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்பெறுவர்.

முதற்பாட்டில் ‘நேசரிதம்’ என்று தொடங்கும் முன் அடிகள் இரண்டுக்கும் பொருள் விரித்திருத்தலால், ஈண்டு அவ்வடிகட்கு உரை வரையப்பெறவில்லை.

தாள் மலர் - தாளாகிய மலர்: இருபெயரொட்டு. மலர், தாமரைப்பூவைக் குறிக்கும் 1‘புவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்பது பெரியார் திருமொழியாகலான். (2)

திருமால்

3. ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

(இ - ள்.) ஆதி தனி கோலம் ஆனான் - முன்காலத்தில் தன் ஒப்பில்லாத வராகஅவதாரம் எடுத்தவனும், அடியவன்கு ஆ - தன் அடியவனான பிரகலாதனுக்காக, சோதி திருத்தூணில் தோன்றினான் - ஒளி பொருந்திய அழகிய தூணிடத்து நரசிம்ம மூர்த்தியாக வௌப்பட்டவனும், வேதத்தின் முன் நின்றான் - வேதத்தில் முதன்மையான பிரணவப்பொருளாக நிலைபெற்றிருந்தோனும், வேழம் முதலே என அழைப்ப - கசேந்திரன் என்னும் யானை முதன்மையானவனே என்று ஓலமிட்டழைக்க, என் என்றான் - என்னவென்று அதன்முன் தோன்றிவந்து துயர் தீர்த்தவனுமாகிய திருமால், எங்கட்கு இறை - எமக்கு இறைவன் ஆவான். (அவனை வாழ்த்துவோம் ; வணங்குவோம்.)

(க - து.) திருமால் எம்மைக் காக்கும் கடவுளாவார் ; அவரை வணங்குவோம்.

(வி - ரை.) கோலம் - வராகம்: வடசொல். தமிழில் பன்றியென்பது பொருள். ஆதித் தனிக்கோலம் என்றதனால் ஆதிவராக உருவெடுத்த திருமால் அவதாரத்தைக் குறித்தது. ஊழிக் காலத்தில் இவ்வுலகம் அழியாவண்ணம் வராக (பன்றி உரு) அவதாரமெடுத்துத் தன் கொம்பினால் பூமியைத் தாங்கினாரென்பது புராணக் கதை. அடியவன் - பிரகலாதன். அவனுக்காகத் திரு

-------------------------------
1. நால்வர் நான்மணிமாலை : 40.