பக்கம் எண் :

மூலமும் உரையும்3

நம்மாழ்வார்

2. 1நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதங் கூற வருந்துணையா - பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர்.

(இ - ள்.) பேச அரிய - புகழ்தற்கு அருமையான, மாமகிழ்மால் - திருமகள் மகிழச்சிகொள்ளுகின்ற திருமாலினது, புகழ் ஆம் - பெருமை பொருந்தியதான, வண்தமிழ் வேதம் விரித்த - வளப்பமுள்ள (திருவாய் மொழியாகிய) தமிழ் மறையைப் பாடியருளிய, மாமகிழ்மாறன் - பெருமையுள்ள மகிழ மலர்மாலையை யணிந்த நம்மாழ்வாரின், தாள்மலர் - திருவடித்தாமரை மலர்கள்; நேசர் இதம்கூர...................அருந்துணையா -.

(க - து.) நம்மாழ்வார் திருவடிகள் நளன் வரலாறு கூறத் துணையாகும்.

(வி - ரை.) பேச அரிய மால் - புகழ்தற்கருமையான திருமால் ; திருமாலின் புகழை ஏத்தி உரைப்பது, திருவாய்மொழி. வடமொழியிலுள்ள மறைபோலத் தமிழில் சிறந்த பொருளை மக்களுக்குத் திரட்டித்தந்து மேல்நெறிக்குய்த்தலின், ‘வண்தமிழ் வேதம்’ என்றார். வண்மை: சிறப்பு, கொடை, வளப்பம் முதலிய பொருள்களை உணர்த்தும் பண்புப்பெயர். ஈண்டுத் தமிழுக்கு அடையாகவந்து சிறப்பித்தது. நம்மாழ்வார், இறைவன் திருவடிப்பேற்றின் உண்மையை உலக மக்கட்குத் திருவாய்மொழித் திருநூலின் வழியாக அருளிச்செய்தாராகலின், அதன் சிறப்புத் தோன்ற, ‘வேதம் விரித்த......மாறன்’ என்றார். பிள்ளைப்பெருமாள் ஐயங்காரும் தமது மாலையில் நம்மாழ்வாரருளிய திருவாய்மொழியைச் சிறப்பித்து,

‘.......................கண்பாராய்
நாராய ணாஅடியேன் நாடும் தமிழ்வேத
பாராய ணாசடகோ பா’

என்று பாராட்டுவாராயினார். மாறன் - கொடிய வினைகளுக்கு மாறுபட்டவன், என்பது பொருள். இவர் இவ்வாறு மாறுபட்

(பாடம்) 1. ‘வளன்கூர் வயல்சூழும் மாநிடத மன்னன்
நளன்சீர் நவிலுநலம் நல்கும்.’