பக்கம் எண் :

164குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

செருவிட்ட விழிமடவார் வாயிட்டுச் சுடுவதல்லாற்
   செங்கை யிட்டும்
எருவிட்டு மூட்டிடநீர் விறகிட்டு மூட்டியவா
   என்சொல் கேனே.    
(86)

*கலி நிலைத்துறை
190.
என்போ டுள்ளமு நெக்குரு கப்புக் கென்போல்வார்க்
கன்போ டின்பு மளித்தருள் கூடலெம் மடிகேளோ
தன்போற் காமன் சாப முடித்தாற் றாழ்வுண்டே
முன்போர் காமன் சாப மனைத்து முடித்தாய்க்கே.    
(87)

    இது விறகு சுமந்த திருவிளையாடலை நினைந்து கூறியது. கரு இட்ட காடு எறிந்து - கருப்பதிற் செலுத்தும் பிறவியின் தொகுதியைப் போக்கி. கடம்பவனம் - மதுரை. ஒரு காட்டை வெட்டி எறிந்து ஒரு காட்டில் இருக்கின்றீரேஎன்றாள். கடுக்கைக் காட்டின் மரு - கொன்றை மலர்த் தொகுதியின் நறுமணம். வெள்ளமென்றது கங்கை நீரை. சிவபெருமான் திருமுடியில் கொன்றை, கங்கை, சந்திரன் என்பன ஒருங்கிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினாள். நீருட்படிந்தும் இந்தத் தீ மூண்டதென்றது விரோதாலங்காரம். செரு இட்ட - போரைச் செய்த. வாயிட்டுச் சுடுவது அல்லால் - தாம் கூறும் பழிமொழியால் என்னை வருத்துவதல்லாமல். செங்கை இட்டும் எரு இட்டும் மூட்டிட; கன்னிமகளிர் அஞ்சலி செய்தும் எருவிட்டும் சந்திரனை வணங்குஞ் செய்தியை இங்ஙனம் கூறினாள். மகளிர் எருமுட்டை யிட்டும் கையால் விசிறியும் தீமூட்டுதல் இயல்பு (66.) (பி-ம்.) ‘செங்கை யீட்டும்’. சோமசுந்தரக் கடவுள் விறகு சுமந்த காலத்தில் அவர் திருமுடிமேற் சந்திரன் இருப்ப அதன்மேல் விறகு வைக்கப்பட்டதனையே விறகிட்டு மூட்டியதாக்க் கூறினாள். மூட்டியவா - மூட்டியவாறு.

    190. (பி-ம்.) *விருத்தக் கலித்துறை, நெடிலடி விருத்தம். இது தலைவி கூற்று.

    அன்போடு இன்பு. “ஈறிலாப் பதங்க் ளியாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே” (திருவா. கோயிற்றிருப். 1); “அன்பினா லின்ப மார்வார்”. “இறவாத வின்பவன்பு வேண்டி” (பெரிய. தடுத்தாட். 196, காரைக்கால். 60) அடிகேள் - ஸ்வாமீ; ஓ; அசைநிலை. தன்போற் காமன் - தன்னைத்தானே ஒத்த காமன்; சாபம் - வில். தாழ்வு உண்டே - குறைவு உண்டோ. ஓர் காமன் சாபம் - ஒப்பற்ற இந்திரனது சாபட்டை; கா - கற்பகச்சோலை. இத்தலத்தில் இந்திரன் சாபம் தீர்ந்தது (146-7.)