| முலையே யணிந்தமுகிழ் நகைநீ ரொர்பெண்கொடியின் | | முலையோ டுமுன்கை வளையால் | | மலையே குழைந்திடுத மிருதோள் குழைந்துரைநம் | | |
கட்டளைக் கலித்துறை 188. | வரும்புண்ட ரீக மிரண்டாலொர் கல்லுமென் வன்னெஞ்சமாம் | | இரும்புங் குழைத்த மதுரைப் பிரான்வெற்பி லேழ்பரியோன் | | விரும்புந் தடமணித் தேர்வல வாவெஞ் சுரமிதன்றே | | கரும்புங் கனியு மிளநீரும் பாரெங்குங் கண்களினே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 189. | கருவிட்ட காடெறிந்து கடம்பவனத் திருப்பீர்நும் | | கடுக்கைக் காட்டின் | | மருவித்த கொள்ளைவெள்ள மடுப்படிந்து மூண்டெழுமால் | | மதித்தீக் கெட்டேன் |
விசேட அணி. பிறிது என் ஆம் - வேறுதவம் என்ன பயனுடையதாகும்? முலை - முல்லை. “முலையணிந்த முறுவலாள்” (கலி. 1.) முகிழ்நகை - தோற்றிய சிரிப்பு. ஓர் பெண் கொடி - உமாதேவியார். குழைந்திடும்- உமாதேவியார். குழைந்திடும் - குழைவதற்குக் காரணமாகிய. (பி-ம்.) ‘குழைந்தது நம்’. மதனனது ஆண்மை மதுரேசர் தந்த வரத்தால் வந்ததென்பது கருத்து. (554.)
188. வினைமுற்றி மீளும் தலைவன் இடைவழியில் தலைவியின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு தேர்ப்பாகனோடு கூறியது.
புண்டரீகம் இரண்டாலென்பதைக் கல்லுக்கும் இரும்புக்கும் தனித்தனியே கூட்டுக. கல் - மேருமலை; அதனைக்குழைத்த புண்டரீகமிரண்டென்றது திருக்கரங்களை. நெஞ்சமாகிய இரும்பைக் குழைத்த புண்டரீகம் இரண்டு; திருவடிகள். ஏழ்பரியோன் - சூரியன். அவன் விரும்புதலாவது தன் தேரை ஓட்டுதற்கு இவன் தக்கவனென்று விரும்புதல். வலவா - பாகனே. சுரம் - பாலைநிலம். கரும்பென்றது புருவங்களை. பனி; இதழ் - இரநீர்: நகில். கண்களின் - கண்களால். (பி-ம்.) ‘பாகுங் க்கனமுமே’ - மருதநிலத்தில் தோன்றுதற்கு உரிய கரும்பு முதலியன பாலைநிலத்தில் தோற்றியது என்ன வியப்பென்றான்.
189. தலைவி கூற்று; சந்திரோபாலம்பனம்.
|