பக்கம் எண் :

162குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை வெண்பா
186.
அடுத்த பதஞ்சலியா ரஞ்சலியா நிற்ப  
எடுத்த பதஞ்சலியா ரேனும் - தடுத்தவற்கா  
மாறிக் குனித்தார் மலைகுனிதென் மாமதனார்  
சீறிக் குனித்தார் சிலை.    
(83)

எழுசீர்ச் சந்தவிருத்தம்
187.
சிலையோ கரும்புபொரு கணையோ வரும்புசிவ    
    சிவவா வியொன்று முளதோ    
இலையோ வறிந்திலமிம் மதனாண் மையென்புகல்வ    
    திதுவே தவம்பி றிதெனாம்    

    186. தலைவி கூற்று; தோழி கூற்றுமாம்.

    அடுத்த பதஞ்சலியார் - தம்மை அடைந்த பதஞ்சலி முனிவர். எடுத்த பதம் சலியார் - ஆட எடுத்த திருப்பாதம் சலியாதவர். பதஞ்சலி முனிவர் வேண்ட இத்தலத்தில் திருநடனம் புரிந்தாரென்பர்; “பதஞ்சலிக் கருளிய பரம நாடக” (திருவா. கீர்த்தித் திருவகவல், 138.; திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்துள்ள ‘பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல்’ என்னும் பகுதியாலும் இது விளங்கும். பதஞ்சலியார்: 470 தடுத்தவற்கா - தடுத்த ஒரு பாண்டியனுக்காக. மாறிக் குனித்தார் - கால் மாறியாடினார்மலை குனித்து என் - மலையை வில்லாக வளைத்தனால் என்ன பயன்? சிலை-வில்லை. இவர் வளைதனால் பயன் யாது? காமன் தன் செயலை ஒழிந்தானல்லன் என்றாள். மா மதனாரென்ற பன்மை இகழ்ச்சிக் குறிப்பு.

    187. (சந்தக் குழிப்பு.) தனனா தனந்தனன தனனா தனந்தனன தனனா தனந்த தனனா.

    செவிலி கூற்று.

    கணை அரும்பு: “அரும்பும் பொரும்படைக் காமர் வில்வேள்” (554); “சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவ” (மணி. 18; 105) சிவ சிவ: இரக்கக் குறிப்பு; “சிவ, சிவநச்ச ராவு மிலையோ” (சங்கர நயினார் கோயிலந்தாதி.) ஆவியென்றது தலைவியின் உயிரை. வன்மையற்ற வில்லையும் அம்பையும் கொண்டு எய்து காமன் இவள் ஆவி உளதோ இலதோவென்று எண்ணும்படி செய்தமையின் அவனது ஆண்மையும் அதனைப்பெற அவன் செய்த தவமும் சிறந்தன வென்றாள். இதுவே தவம் - இதுவே உண்மையான தவம். இஃது உறுப்புக்குறை