237. | ஒற்றிற் றெரியாச் சிறைப்புறத் தோர்துமெனப் | | பொற்றோ டுணையாத் தெரிதந்தும் - குற்றம் | | அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று | | முறையிடினுங் கேளாமை யன்று. |
238. | ஏதிலார் யாதும் புகல விறைமகன் | | கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று | | காக்கை வெளிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை | | சால்புடைத் தென்பாரு முண்டு. |
239. | கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட் | | குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி | | தான்வாய் மடுப்பினு மாசுணங் கண்டுயில்வ | | |
237. செங்கோலரசன், குற்றத்தை அறியும் வழி கூறப்படும்.
ஒற்றின் - ஒற்றர்களால். தெரியா - தெரிந்து. அரசர்கள் ஒற்றர்களாற் செய்திகளை அறிதல் திருக்குறளிலுள்ள ஒற்றாடலென்னும் அதிகாரத்தால் விளங்கும். சிறைப்புரத்து ஓர்தும் - மறைவிடத்திலிருந்து அறிவோம்; சிறைப்புறத்தறிதல் பொற்கைக் பாண்டியன் வரலாற்றால் அறியப்படும். துணையாக வருவோர் யாருமின்றித் தோளே துணையாக. தெரிதந்தும்: உம்மை உயர்வு சிறப்பு. (பி-ம்.) ‘துணையாத் திரிதந்தும்’. இப்பாடத்திற்குத் துணையாகச் சென்று திருதந்துமென ஒருசொல் வருவிக்க.
கேளாமை செங்கோன்மையன்று.
238. அரசன் யாவர் கூற்றையும் ஆராயாமல் நம்புதல் கூடாதென்பர்.
ஏதிலார் - அயலார். இறைமகன் - அரசன். கோது ஒரீஇ - குற்றத்தை நீக்கி. கொள்கை - நல்லனவற்றை அறிந்து கொள்ளுதல். முதுக்குறைவு - பேரறிவு. நேர் நின்று - அஞ்சாமல் எதிரே நின்று. வெளிது - வெண்ணிறமுடையது. காக்கை வெளிதென்பாரென்றது, கண்கூடாகப் பலரறிந்த உண்மையை மறுத்துக் கூறுதற்கு எடுத்துக் காட்டியவாறு. தாய்க்கொலை - தாயைக் கொல்லுதல். சால்புடைத்து - ஏற்புடையது. அறமல்லாதவற்றை அறமென்று கூறுதற்கு எடுத்துக் காட்டியது இது. என்பாரும் : உம்மை, இழிவு சிறப்பு.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு ம்பபொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள், 423) என்பன ஈண்து அறிதற்பாலது.
239. கேடு கண்கூடாப்பட்ட தெனினும்; கண்கூடா - பிரத்தியட்சமாக. கீழ்மக்கட்கு உணர்ச்சி உண்டோ; உணர்ச்சி - கேடு வருமென்றும், அதனை நீக்க உபாயந் தேட வேண்டுமென்றும் அறிதல். மற்று : அசைநிலை. மண்டு எரி - மிக்கு எரிகின்ற நெருப்பு. தான் : அசைநிலை. வாய்
|