240. | நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல் | | பக்கத்தார் யாரையு மையுறுதல் - தக்கார் | | நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் | | |
241. | பணியப் படுவார் புறங்கடைய ராகத் | | தணிவில் களிப்பினாற் றாழ்வார்க் - கணிய | | திளையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள் | | |
மடுப்பினும் - தம்மை எரித்தாலும், மாசுணம் பெருமூச்செறிந்து பேராவாய்க் கண்டுயில்வ; மாசுணம் - பெரும்பாம்புகள்; பேரா - இருந்த இடத்தினின்றும் நகராதனவாய்.
இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி.
240. அரசனுக்குக் கேடு பயப்பனவற்றைக் கூறுவார்.
நட்புப் பிரித்தல் - பழமையான நண்பரைப் பிரியும்படி செய்தல். பகை நட்டல் - நெடுங்காலம் பகையாயுள்ளாரை நட்பாக்கிக் கொள்ளுதல்: “முற்றம்மைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலும் ........சாவ வுறுவான் றொழில் (திரிகடுகம், 4) ஒற்று இகழ்தல் - கண் போன்ற ஒற்றர் கூறியவற்றை இகழ்ந்துரைத்தல். பக்கத்தார் - அமைச்சர்; “உழையிருந்தான்” (குறள், 638) என்பதனால் இங்ஙனம் கூறினார். நெடுமொழி கோறல் - நெடுங்காலத்திற்குப் பயன்படுவனவான செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து முதலியவற்றைஅவமதித்தல்;“மெய்ம்மொழிமற்.றென்மொழிபிழையா தாகும், பின்வழி நுமக்குப் பெரும்பயன் றருமே” (563) என்பர் பின். பிறிதாதல் - வேறுபடுதல். கெடுவது காட்டும் குறி - தான் பின்னே கெடுவதை முன்னே தெரிவிக்கும் அடையாளங்கள்.
241. பெரியாரைப் பிழையாமை இதிற் கூறப்படும்.
பணியப்படுவார் - தம்மால் வணங்கத்தக்க. அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தாய், தந்தை, தமையன் முதலியோர் (பு. வெ. 221.) புறங்கடையராக - தலைவாயிற் புறத்தே இருப்ப. பணிவில் களிப்பினால் - குறைதலில்லாத செல்வச் செருக்கால். தாழ்வார்க்கு - எதிர்செல்லுதலன்றித் தம்பால் வரும் வரையில் தங்கி யிருப்பார்க்கு. இளையாள் முயக்கு அணியதெனினும்; இளையாள் - திருமகள்: இளையாள் முயக்கென்று, செல்வத்தோடு கூடியிருத்தலை. மூத்தாளது போகங்கொளல் சேய்த்தன்று; விரைவில் வறியராவாரென்பது கருத்து; மூத்தாள் - மூதேவி (குறள், 167.) செய்த்தன்று - மிக அண்மைக் காலத்துள்ள தென்றபடி.
|