பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்201

260.
புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்    
அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும்    
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே    
பல்காலுங் காமப் பகை.    
(54)

261.
 புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை    
 வெளியிட்டு வேறாதல் வேண்டுங் - கழிபெருங்    
 கண்ணோட்டஞ் செய்யார் கருவியிட் டாற்றுவார்    
 புண்வைத்து மூடார் பொதிந்து.    
(55)

262.
நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து    
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமா    
நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை    
வாளா கிடப்பன் மறந்து.    
(56)

    260. புறப் பகையினும் உட்பகை மிக அஞ்சத்தக்க தெற்பது கூறப்படும்.

    புறப்பகை - புறத்தே பகைமையைப் புலப்படுத்துபவர். கோடி; பல என்னும் பொருளில் வந்தது. மிக்குறினும்: உம்மை உயர்வு சிறப்பு. முன்னேயறிந்து காக்கப்படுதலாலா புறப்பகைக்கு அஞ்சாரென்றார். அகப்பகை - உள்ளே பகையை யுடையவர். காப்ப - தம்மைக் காத்துக் கொள்ளுவார்கள். “எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும், உட்பகை யுள்ளதாங் கேடு” (குறள், 889). சொல் ஒன்றின் யாப்பார் - ஒரு சொல்லால் தம் வயப்படுத்தும் பெரியோர்; யாத்தல் - கட்டுதல் பரிந்து - வருந்தி. காமமாகிய பகையை. யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவென்க. புறப்பகைகளை அடக்கும் ஆண்மை யுடையார்க்கும் உட்பகையாய காமத்தை அடக்குதல் அருமை யென்றபடி.

    இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி.

    261. உட்பகையாயுள்ளாரைத் தன்பானின்றும் விலக்குதல வேண்டுமென்பது கூறப்படும்.

    புறம் நட்டு - புறத்தே நட்புச் செய்து. அகம் வேர்ப்பார் - மனத்தில் வெறுப்பவரது. நச்சுப் பகைமை - நஞ்சு போன்ற பகைமையை. வெளியிட்டு - வெளிப்படையாகச் சொல்லி. வேறாதல் வேண்டும் - உட்பகையுடையாரினின்றும் தம்மை வேறாக்கிக் கொள்ளல் வேண்டும்; வேண்டும்; தேற்றவினை. (பி-ம்.)‘செய்யேல்’. கருவியிட்டு - அறுத்தற்குரிய கருவியால் அறுத்து. புண்ணைக் கருவியிட்டு ஆற்றுவார்; பொதிந்து வைத்து மூடார்.

    இதுவும் எடுத்துக்காட்டுவமையணி.

    262. நட்பிடை குய்யம் வைத்து - நட்பினிடத்தே வஞ்சனை செய்து; “நட்பிடைக் குய்யம் வைத்தான்” (சீவக. 253). எய்யாவினை - பிறரால்