258. | மெய்வருத்தம் பாராம் பசிநோக்கார் கண்டுஞ்சார் | | எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி | | அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் | | |
259. | சிறிய பகையெனினு மோம்புத றேற்றார் | | பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத் | | தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் | | |
காலம் அறிந்து - தமக்கு நன்றாம் காலத்தை அறிந்து. இடம் - தம் வெற்றிக்கேற்ற இடங்களை. மூலம் - காரணத்தை. விளைவளிந்து - பயனை அறிந்து. சூழ்வன சூழ்ந்து - பின்னும் ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து. துணைமை வலி - உதவியாயினாரது வண்மை; துணைமை; ஆகுபெயர். ஆகவினை - முயற்சி. திருக்குறளில் காலமறிதல் முதலிய அதிகாரங்களில் விரிவாக்க் கூறப்பட்ட நீதிகள் இங்கே ஒரு செய்யுளிற் சுருக்கிக் கூறப்பட்டமை அறியற்பாலது.
258. தாம் மேற்கொண்ட முயற்சியில் ஊக்கமுடையாரது இலக்கணம் கூறப்படும்.
மெய்வருத்தம் - உடம்பின் வருத்தத்தை. செவ்வியருமை - காலம் அரிதாயிருத்தல். அவமதிப்பும் - தம்மைப் பிறர் அவமதித்தலையும்; உம்மை: உயர்வு சிறப்பு. கருமமே கண்ணாயினார், பாரார், நோக்கார், துஞ்சார், மேற்கொள்ளார், அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளாரென்க.
259. சிறுபகையை இகழ்ந்து அதனைக் களையாமல் இருத்தல் தீது என்பது கூறப்படும்.
ஓம்புதல் தேற்றார் - நீக்குதலை அறியாதவர்; தேற்றார்; தன் வினைக் கண் வந்தது. “நட்பாட. றேற்றா தவர்” (குறள், 187) என்புழிப்போல. பிழைபாடு - குற்றம். நிறைந்த பயத்திலுள்ள தாழ்ந்த நீரில்; கயம் - குளம். நிழல் காண்பு - தன் நிழலைக் காணுதல்; காண்பு - காணுதல்; தொழிற்பெயர்; “மனங்கவல்பின்றி” (பொருந. 95) என்பதுபோல. வலியாற் சிறிய பகைவர் பெருவன்மை யுடையாருக்கும் தீங்கிழைப்பரென்பது உவமையால் விளங்கும்.
சிறிய பகையால் பெருந்தீங்கு விளைதல், “சிறியரென்றிகழ்ந்து நொய்வு செய்வன செய்யல்” (அரசியற். 32) என்று இராமன் கூற்றாக்க் கம்பர் அமைத்த செய்யுளாலும் விளங்கும்.
இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி.
“வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற், றீயெச்சம் போலத் தெறும்”, “இளைதாக முண்மரங் கொல்க கறையுநர், கைகொல்லுங் காழ்த்த விடத்து” (குறள், 674, 879) என்பன இதனோடு ஒப்பு நோக்கற்பாலன.
|