| 9. திருவெங்கைக்கோவை |
|
| பரத்தையருலகியனோக்கிவிடுத்தலிற்றலைமகன் வரவுகண்டுவந்துவாயில்கண்மொழிதல் |
| |
| |
நாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னாடனையாய் ஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி லிரவியெதிர் பூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புவிபுரக்குங் காவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே.
|
(386) |
| |
| வரவுணர்பாங்கி தலைவிக்குணர்த்தல் |
| |
| |
மின்னா கியசெஞ் சடையார் திருவெங்கை வெற்பிலுனை உன்னா தகன்றவர் வந்தா ரவர்செய லுன்னலைநீ இன்னாசெய் தாரை யொறுத்திடி னன்மை யியற்றுகெனச் சொன்னார் புலவ ரறிந்திலை யோபொற் சுடர்த்தொடியே.
|
(387) |
| |
| தலைவனைத்தலைவியெதிர்கொண்டுபணிதல் |
| |
| |
அரவிடுங் கங்கணக் கையாளர் கொன்றையு மாத்தியுமே விரவிடுஞ் செஞ்சடை வேதிய னார்திரு வெங்கைவெற்பில் பரவிடு மெங்கள் விழியாரக் கண்டுன் பதம்பணிய வரவிடு மங்கையர் பல்லாண் டிருந்துயிர் வாழியவே.
|
(388) |
| |
| புணர்ச்சியின் மகிழ்தல் |
| |
| |
நாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகள் பூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும் பாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயலினில் ஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வின்பினையே.
|
(389) |
| |
|
| |
386. நாவலர். அறிஞர்கள்; நால்வர் எனினுமாம். ஏவலர்-ஏவலாளர். இரவியெதிர் அலர்கின்றது என என்றமையால் பூவென்றது தாமரைப் பூவையே குறித்தது. புரத்தல்-காத்தல். காவலர்-அரசர். உலகியல்-உலகநடை. 387. உன்னாது-நினையாமல். உன்னலை-நினையற்க. அகலல்-பிரிதல். இன்னா-தீங்கு. ஒறுத்தல்-தண்டித்தல் “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்பது திருக்குறள். 388. அரவு கங்கணம்-பாம்புக்காப்பு. ஆத்தி-ஆத்தி மலர். விரவிடும்-கலந்தணியும். பரவிடல்-பரத்தல். 389. ஏ-அம்பு. கடல் அமுது-பாற்கடலில் தோன்றிய அமுதம். பூ : ஆகு பெயர். பா-பாடல். பாயல்-படுக்கை. நல்கல்- கொடுத்தல்.
|
|
|
|