| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல் |
| |
| |
பண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய் கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள பெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத் துண்கால மென்முலை நுண்ணிடை காறு முறையென்றதே.
|
(394) |
| |
| தலைவிபாணனைமறுத்தல் |
| |
| |
பைத்தலை நாக மணிவோன்றென் வெங்கைப் பனிவரைமேல் செய்த்தலை யூர னுனையீங்கு விட்டது தேரினொரு மெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன் பொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.
|
(395) |
| |
| வாயின்மறுக்கப்பட்ட பாணன்கூறல் |
| |
| |
வெல்வீர வாள்விழி மங்கைபங் காளர்தம் வெங்கைவெற்பில் நல்வீ கமழ்புயத் துங்கா தலர்பெயர் நானுரைப்பில் செல்வீ யுலக ரெனைவியந் தேகட் செவியுமிழ்செங் கல்வீ சுவரின்று நீவீ சினைகருங் கல்லினையே.
|
(396) |
| |
| விருந்தொடு வந்துழிப்பொறுத்தல்கண்டிறையோன் மகிழ்தல் |
| |
| |
திருந்து மரவப் பணியாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில் அருந்து மமுத மருந்தாய்ப் பிணிகளைந் தாங்குமுத்தும் முருந்து மனைய நகையா ளிதய முனிவகற்றும் விருந்து வருகதில் லென்றுமெப் போதுமெம் வீட்டினுக்கே.
|
(397) |
| |
|
| |
394. பண்-இந்தளம், காந்தாரம், பஞ்சுரம் முதலியவை; பைரவி. தோடி முதலிய இராகங்களெனினுமாம். காறும்-அளவும். உளை-உள்ளவளாவை. 395. பைத்தலை-படத்தோடு கூடிய தலை. தேர்தல்-ஆராய்தல். நுழைவான்-நுழைய. கரவன்-கள்ளன். புலைமகன்-நீசன். 396. வீரம்-வாளுக்கிலக்கணை. வீ-மலர். கமழ்தல்-மணம் வீசுதல். செல்வி-திருமகள். வியத்தல்-புகழ்தல். கட்செவியுமிழ் செங்கல்-மாணிக்கம். 397. பணி-அணிகலம். அமுதம்-பால். களைதல்-ஒழித்தல். முருந்து-மயிலிறகினடி. நகை-பல். இதயம்-மனம். விருந்து : ஆகுபெயராய் விருந்தினரை யுணர்த்திற்று.
|
|
|
|