New Page 1

35

சேக்கிழார் பிள்ளைத் தமிழ் அமைப்பு 

 

   சேக்கிழார் பெருமானார்மீது பாடப்பட்டமையின், இது சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனப்பட்டது.  இதன் ஆசிரியர் துறைசை ஆதீனம், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். 

   இவர் பிள்ளைத்தமிழ் வகையில் திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றம்மை பிள்ளைத்தமிழ்,  திருவானைக்கா அகிலாண்டா நாயகி பிள்ளைத்தமிழ், உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ். திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை அம்மைப் பிள்ளைத்தமிழ், திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்,   திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் நூல்களையும் பாடியுள்ளனர். 

   திரு பிள்ளை அவர்கள் ஸ்ரீ சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழிலும், காப்புப் பருவத்தைப் பாடி இருக்கும் அமைப்பினை நன்கு ஊன்றிக் கவனித்தல் வேண்டும்.  காப்புப் பருவத்தில் எல்லாப் புலவர்களும், ஏன் திரு பிள்ளை அவர்களும் திருமால், சிவபெருமான், உமை, கணபதி, முருகர், அலைமகள், கலைமகள், துர்க்கை, நால்வர் ஆகியவர்கட்கு வணக்கம் செலுத்திப் பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ காக்குமாறு வேண்டுவர்.  ஆனால், திரு பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழில் காப்புப் பருவத்தில், திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்ட திருத்தொண்டர்களையே காப்புக் கடவுளர்களாகப் பாடப்பட்டிருத்தலை ஊன்றிக் கவனித்தல் வேண்டும்.  அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் அகச் சந்தானம் புறச் சந்தானாச்சாரியர்,