உள

34

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

உள.  பழனிப் பிள்ளைத்தமிழ் ஒவ்வொரு பருவத்திற்கும் மும்மூன்று பாடல்களைக் கொண்டு திகழ்கிறது.  மாசிலா மணித் தேசிகர் இயற்றிய திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழில் காப்புப் பருவத்திலும், வாரானைப் பருவத்திலும் தனித்தனிப் பதினொரு பாடல்கள் உள.  முத்தப் பருவத்திலும் சிறு பறைப் பருவத்திலும் தனித்தனி ஒன்பது பாடல்கள் உள.  ஏனைய பருவங்களில் பப்பத்துப் பாடல்கள் உள.  சிவபிரகாச சுவாமிகள் இயற்றிய சிவஞான பாலைய்ய சுவாமிகள் பிள்ளைத் தமிழின் வாரானைப் பருவத்தில் பதினோரு பாடல்களும், தணிகைமணி. வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பாடிய திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ் நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், ஏனைய பருவங்கட்குத் தனித்தனி ஒரு பாடலும் ஆகப் பத்துப்பாடல்களே உள.  மு. கோ. இராமன் அவர்கள் பாடிய அப்பர் பிள்ளைத் தமிழில் காப்புச் செய்யுள் மட்டும் மூன்றும், ஏனைய பருவம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாடல் வீதம் பத்துப்பாடல்களும் உள்ளன.   

     இதுவரையில் எழுதப்பட்ட விளக்கம், பொதுப்படப் பிள்ளைத்தமிழ் நூல்பற்றிய விளக்கம் ஆகும்.  அடுத்துச் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் அமைப்பினையும் சிறப்பு முறையில் ஆய்வோமாக.