ந
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
33 |
நீராடல் பருவம் :
இதுபெண் குழந்தையை நீரில் குளிக்குமாறு வேண்டும் பருவம் இங்கு ஒரு குறிப்பை அறிதல் நன்று.
நீராடற்குப் பதிலாகக் கழங்காடுமாறு வேண்டுதலை ஒரு பருவமாகக் குறிப்பதும் உண்டு. இவ்வாறு கழங்காடற்
பருவம் அமையப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் ஆகும்.
மெய்வளர்
பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின்
வெள்ளநீர்
ஆடியருளே
மெய்த்தவத்
துறைமேவும் உத்தமக் கௌமாரி
வெள்ளநீர்
ஆடியருளே
- பெருந்திருப்பிராட்டியார்
பிள்ளைத் தமிழ்
ஊசல் பருவம் : இது
பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆடுமாறு வேண்டும் பருவம் ஆகும்.
புரிசச்சி தானந்த
சகளநிட்
களவல்லி
பொன்ஊசல் ஆடிஅருளே
புகழ்மூங்கி்்ல்
வனநன்மை திகழ்காந்தி
மதி அம்மை
பொன்ஊசல் ஆடிஅருளே
-திருநெல்வேலிக் காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ்
இங்குக் கூறப்பட்ட
பருவங்களில் காப்பும் பருவத்திற்குப் பதினோரு பாடல்களும், பன்னிரண்டு பாடல்களும் ஏனைய
பருவங்கட்குப் பப்பத்தும் பாடும் மரபு பெரிதும் தழுவப்பட்டுவந்துள்ளதை மேலே கூறி இருப்பதை நினைவில்
கொள்க. ஆனால், இம்மரபு சிறிது மாறுபட்டு வருதலையும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைப்
பார்க்கும்போது அறிய வருகிறது.
இதனைக் கீழ்க்
குறிக்கப்பெறும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வழி நன்கு உணரலாம். கலைசைச் செங்கழுநீர் விநாயகர்
பிள்ளைத்தமி்ழில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஐந்தைந்து பாடல்களே உள்ளன. சிவந்தெழுந்த பல்லவராயன்
பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏழு ஏழு பாடல்களே
|