New Page 1
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
47 |
செ. 9.
வேளாளர் மாண்பு, வேளாளர் தம் கையில் தாற்றுக்கோல் பிடிப்பதனால்தான் ஏனையவர்களும் தம்
தமக்குரிய கோல் கொண்டுள்ளார் எனல். பக்கம் 535-538
செ. 10.
சேக்கிழாரைப் பலவாறு சிறப்பித்து வருக என அழைத்தல் ; அவ்வாறு விளிப்பதன் கருத்து. பக்கம்
539-544
7. அம்புலிப் பருவம்
செய்யுள்
1. அம்புலிப் பருவ விளக்கம், ஏனைய பருவங்கட்கும் இப்பருவத்திற்கும் உள்ள வேறுபாடு, சேக்கிழாரோடு
சந்திரனை ஒப்பிடுதல், குன்றத்தூர் மாளிகைகளின் சிறப்பு, சிலேடைப் பொருள் அமைந்திருத்தல்.
இதில் சாம உபாயம் அமைந்துள்ளது. பக்கம் 545-552
செ. 2.
சேக்கிழாரோடு சந்திரனை ஒப்பிடுதல், குன்றத்தூர் மாளிகையின் மாண்பு, சந்திரன் அத்திரி
முனிவர் விழியில் தோன்றியது. சிலேடை அணி அமைந்த பாடல். இதுவும் சாம உபாயப் பாடல், பக்கம்
552-554
செ. 3.
சேக்கிழாருக்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, இதிலும் சிலேடை அணி அமைந்துளது, இது பேத உபாயம்
அமைந்த பாடல். பக்கம் 555-561
செ. 4.
நடராசப் பெருமான் திருநடனச் சிறப்பு, அவனே சற்குரு ஆவான் எனல், குருபகவானிடம் சந்திரன் சாபம்
பெற்றது, குன்றத்தூர் மாளிகைகளின் மாண்பு, சேக்கிழார்க்கும், சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு,
இதில் பேத உபாயம் அமைந்துள்ளது. பக்கம் 562-567
செ. 5. சேக்கிழார்க்கும்,
சந்திரனுக்கும் உள்ள வேற்றுமை, சந்திரன் பாபக்கிரகங்களுடன் மாதம் தோறும் உறவு கொள்ளுதல்,
பன்னிரு ராசிகள், இதில் பேத உபாயம் உளது. பக்கம் 567-571
|