அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக் கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம் உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து | 5 |
| | |
இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்! செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்; ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்; மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்; விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்; | 10 |
| | |
ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும் நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்; படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும், தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும் கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின | 15 |
| | |
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும், பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும், முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும், இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை; உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை | 20 |
| | |
எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக் கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச் செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை, மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத் தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் | 25 |
| | |
கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச் சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக் கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக் கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை, ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை. | 30 |
| | |
புலராக் கவலை விளைமரப் பொதும்பை, ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக் | |