பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்171


29.உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே!
  
30.வாதனை போய், நிட்டையும்போய், மாமௌன ராச்சியம்போய்
பேதம்அற நின்ற இடம் பெற்றனையே; நெஞ்சமே!
  
31.இரதம் பிரிந்துகலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே, நெஞ்சமே!
  
32.சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீபெற்றாய்; நெஞ்சமே!
  
 

உடல் கூற்று வண்ணம்

குறப்புச் சந்தம்

தனதனதான தனதனதான
     தந்தனந்தன தந்ததனந்தன
தனனை தனந்த தனனதனந்த
          தானன தானன தானனதந்த
     தந்தனதான தனதானனா

  
1.ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
     ஊறுசுரோணிதம் மீதுகலந்து-
  
2.பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
     பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற-
  
3.உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து
     யோகமும்வாரமும் நாளும் அறிந்து-
  
4.மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
     ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து-