| 5. | ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து வாஇருபோவென நாமம்விளம்ப- |
| | |
| 6. | உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து தேடியபாலரோ டோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே |
| | |
| 7. | உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப வாழ்பதினாறு பிராயமும்வந்து- |
| | |
| 8. | மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து மாகதர்போகதர் கூடிவணங்க- |
| | |
| 9. | மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து மாமலர் போல் அவர் போவது கண்டு- |
| | |
| 10. | மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடியமாமுதல் சேரவழங்கி- |
| | |
| 11. | ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும் வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று வாலிபகோலமும் வேறு பிரிந்து- |
| | |
| 12. | வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவி ராத குரோதம் அடைந்து- செங்கையினில் ஓர் தடியும் ஆகியே |
| | |
| 13. | வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து- |