| 14. | துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும் உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு |
| | |
| 15. | கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து கால்வழி மேல்வழி சாரநடந்து- |
| | |
| 16. | தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும் உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து- |
| | |
| 17. | மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம் மேதினி வாழ்வு நிலாதினி நின்ற- |
| | |
| 18. | கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலுசு வாசமும் நின்று- நெஞ்சுதடுமாறி வரும்நேரமே- |
| | |
| 19. | வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல்யம தூதர்கள் வந்து- |
| | |
| 20. | வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலம் அறிந்து- |
| | |
| 21. | பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த வேபிணம் வேக விசாரியும் என்று- |
| | |
| 22. | பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து பாவகமே செய்து நாறும் உடம்பை- |