பக்கம் எண் :

186சித்தர் பாடல்கள்

இன்னும்,
“சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”

என்ற  உதாரண  முகத்தான்   எத்தனை   சொந்தங்கள்  நமக்குத்  துணை
நின்றாலும்  அவையெல்லாம்  உண்மையான  சொந்தங்கள்  அல்ல  என்றும்
இறைவன் ஒருவனே  நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து
மேல் ஓட்டினுள்  ஒட்டாத புளியம் பழம் போல வாழ்க்கை நடத்த வேண்டும்
என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.

     இவை போல இன்னும் சில பழமொழிகள் ஆழ்ந்த கருத்துடையனவாய்
இவர் பாடல்களில் பின்னிப் பிணைந்துள்ளன.
‘தேனில் விழுந்த ஈயைப் போல’ (81)
‘ஏட்டுச் சுரைக்காய்க் கறிக் கெய்திடாது போல்’ (94)
‘காந்தம் வலி இரும்பு போல்’ (91)
‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி’ (92)
‘கண்டவர்கள் ஒருகாலும் விண்டிலர்
விண்டவர் ஒருகாலும் கண்டிலர்’ (105)
‘உள்ளங் கையிற் கனிபோல’ (12)

    இவர் பாடலில் எல்லாப் பாடல்களுமே ஆடு பாம்பே என்று முடிவதற்கு
செத்த  பாம்பை  ஆட்டுவித்து  தத்துவங்களைச் சொன்னதுடன் இன்னொரு
காரணமும்  கூறப்படுகிறது.  குண்டலினியாகிய  பாம்பை இவர் ஆட்டுவித்து
இறை   இன்பம்   காணுதலால்   ஆடுபாம்பே   என்று   குண்டலினியை
முன்னிலைப்படுத்திய சித்தர் பாடல்கள் இவையென்றும் சிறப்பிக்கப்படுகின்றன.

     பாம்பின் முழு ஆட்டத்தைப் பாடல்களில் தொடர்ந்து காணலாம்.