கடவுள் வணக்கம் கண்ணிகள் தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன் அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. | 1 |
| | |
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. | 2 |
| | |
பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப் பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய் மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும் வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. | 3 |
| | |
எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே. | 4 |
| | |
அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே ஏகமன மாகநாடி யாடு பாம்பே. | 5 |
| | |
சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத் தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே நீதிதவ றாவழியில் நின்று நிலையாய் நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே. | 6 |
| | |
அருவாயும் உருவாயும் அந்தியாயும் அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும் திருவாயுங் குருவாயும் சீவனாயும் செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே. | 7 |