ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை ஒட்டியே யூதுகுழல் - கோனே ஒட்டியே யூதுகுழல். | 101 |
| | |
மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை கட்டிவைத் தூதுகுழல் - கோனே கட்டிவைத் தூதுகுழல். | 102 |
| | |
கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும் கிட்டாவென் றூதுகுழல் - கோனே கிட்டாவென் றூதுகுழல். | 103 |
| | |
பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க ஒட்டியே யூதுகுழல் - கோனே ஒட்டியே யூதுகுழல். | 104 |
| | |
எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே தனதாக வூதுகுழல் - கோனே தனதாக வூதுகுழல். | 105 |
| | |
அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக் கற்றதென் றூதுகுழல் - கோனே கற்றதென் றூதுகுழல். | 106 |
| | |
பால்கறத்தல் சாவா திருந்திடப் பால்கற - சிரம் தன்னி லிருந்திடும் பால் கற வேவா திருந்திடப் பால்கற - வெறும் வெட்ட வெளிக்குள்ளே பால்கற. | 107 |
| | |
தோயா திருந்திடும் பால்கற - முனைத் தொல்லை வினையறப் பால்கற வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும் வயிறார வுண்டிடப் பால்கற. | 108 |
| | |
நாறா திருந்திடும் பால்கற - நெடு நாளு மிருந்திடப் பால்கற | |