பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்251


வெண்ணிலவை   நோக்கிப்   பாடியதை  நோக்க   எல்லா   ஞானிகளும்
தன்னையறிதலுக்கு  எவ்வளவு  முக்கியத்துவம்  தந்திருக்கிறார்கள்  என்பது
புலப்படும்.

“தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
     பின்னாசை யேதுக்கடி - குதம்பாய்
     பின்னாசை யேதுக்கடி”

     இவர்  தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும்
இறைவனையடையும்   பக்குவம்   பெற்றோர்க்கு  இதெல்லாம்  தேவையற்ற
வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார்.

“ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு
     வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய்
     வாதாட்ட மேதுக்கடி”

“நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
     வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய்
     வாட்டங்க ளேதுக்கடி”.

“முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு
     சட் கோண மேதுக்கடி”

“சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு
     பத்திர மேதுக்கடி”

என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும்.

     முதற்பாடல் மூலாதார  யோகத்தையும்,  இரண்டாம் பாடல் சுழுமுனை
வழியையும்,  மூன்றாம்  பாடல்  அநாகத  சக்கரத்தையும்  நான்காம் பாடல்
சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன.

     இறைவனாகிய உண்மைப்  பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள்
மெய்யாகிய உடலை நீடித்து