பக்கம் எண் :

282சித்தர் பாடல்கள்

     “சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.”

     “என்ன தோண்டிக்கு விலையா?”

     “ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே
வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.”

     ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம்
நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக்
கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?”

     ஆண்டியின்  பேச்சு  குயவன்  மனதை  இளக்கவில்லை. “போ, போ,
காலையில்  வந்து  வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு
வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

     ஆனால் ஆண்டி போகவில்லை.  அவன் பார்வையில் படும் இடமாகப்
பார்த்து  தூரத்தே  அமர்ந்து  கொண்டான்.  தினசரி பிச்சை எடுத்த நேரம்
போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே
பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி
தர மாட்டானா என்ன?

     இப்படியே  ஒரு  நாளல்ல,  ஒருமாதமல்ல,  பத்து  மாதங்கள்  கடந்து
விட்டன.   ஆண்டியின்   பொறுமை  குயவனைக்  கொஞ்சம்  கொஞ்சமாக
மாற்றியது.   குயவனும்   போனால்  போகிறது  என்று   நன்கு  வனைந்த
குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான்.

     ஆண்டியின்  சந்தோஷத்திற்கு  அளவேது.  ஆகா,  இனி என்னைவிட
பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச்
செடிகளுக்குப்