பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்291


வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
     வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.
பாப
 
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
     தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
     சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.
பாப
 
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
     பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
     வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.
பாப
 
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
     தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.
பாப
 
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
     காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
     அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.
பாப
 
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
     பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
     தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.
பாப
 
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
     சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
     ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.
பாப
 
எவ்வகை யாகநன் னீதி - அவை
     எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
     ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.
பாப