பக்கம் எண் :

290சித்தர் பாடல்கள்

பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
     பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
     சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
பாப
 
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
     மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
     ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.
பாப
 
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
     கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
     சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.
பாப
 
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
     தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
     வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.
பாப
 
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
     எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
     வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
பாப
 
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
     இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
     சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.
பாப
 
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
     போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
     மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.
பாப
 
வைதோரைக் கூடவை யாதே - இந்த
     வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே