அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. | பாப |
| |
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே பொய்க்கலை யால்நட வாதே - நல்ல புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே. | பாப |
| |
கூட வருவதொன் றில்லை - புழுக் கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை தேடரு மோட்சம தெல்லை - அதைத் தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. | பாப |
| |
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. | பாப |
| |
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. | பாப |
| |
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக் கங்கையா டில்கதி தானுமுண் டாமோ பேசமுன் கன்மங்கள் சாமோ - பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. | பாப |
| |
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம் போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம் மெய்யாக வேசுத்த சாலம் - பாரில் மேவப் புரிந்திடில் என்னனு கூலம். | பாப |
| |
சந்தேக மில்லாத தங்கம் - அதைச் சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம் அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும் ஆனந்த மாக நிரம்பிய புங்கம். | பாப |